Monday, October 17, 2011

வெஜிடபுள் புலாவ்




தேவையான பொருட்கள் 
பாஸ்மதி அரிசி - 2cup
பட்டை, லவகம், கிராம்பு - தலா 2
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
வெங்காயம் நீளமாக அரிந்தது - 1 கப்
தக்காளி பொடியாக அரிந்தது - 1 கப்
காய்கறி கலவை - 1 கப்
மிளகாய் தூள் - 2  ஸ்பூன்
மஞ்ச தூள் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
தயிர் - 1 கப்
கொத்தமல்லி புதினா - 1 கப்
வெண்ணை (அ) எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை


  • முதலில் பாஸ்மதி அரிசி யை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • குக்கரில் வெண்ணை சேர்த்து உருகியதும், பட்டை கிராம்பு லவகம் தாளிக்கவும்.
  • இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்கவும்.
  • பிறகு வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.

  • இதனுடன் தக்காளி, காய்கறி கலவை, உப்பு, மஞ்ச தூள், மிளகாய் தூள்,பச்சை மிளகாய் இவை அனைத்தும் சேர்த்து 5 நிமிடம் வரை கிளறவும்.

  • கொத்தமல்லி, புதினா, தயிர் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும். 

  • முடிவாக ஊற வைத்த அரிசியின் தண்ணீர் யை இருத்து விட்டு வதக்கிய கலவை யுடன் சேர்த்து 3 நிமிடம் கிளறவும்.
  • 1 கப் அரிசி க்கு ஒன்றை கப் அளவு தண்ணீர் என்ற விதத்தில் 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விசில் போடவும்.
  • 3 விசில் வந்ததும் அடுப்பை அனைத்து விடவும்.
  • வெஜிடபிள் புலாவ் தயார். தயிர் பச்சடி யுடன் பரிமாற மிக அருமையாக இருக்கும். 

Friday, October 14, 2011

ஓட்ஸ் பிஸ்கட்


                                 Homemade Oat Biscuits
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 2 கப்
மைதா - 2  கப்
பேகிங் பவுடர் - 3/4 ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
வெண்ணை (அ) வனஸ்பதி - 1 கப்
சக்கரை - 1 கப்
வன்னிலா எசென்ஸ் - 1  ஸ்பூன்
பால் - 1/4 கப்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் மைதா, ஓட்ஸ்.பேகிங் பவுடர் முன்றையும் கலந்து தனியாக வைத்து கொள்ளவும்.
             
  • வனஸ்பதி யை 5 நிமிடம் நன்றாக பீட் செய்யவும்.
  • அதனுடன் வன்னிலா எசென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.

  • பிறகு அதனுடன் சக்கரை சேர்த்து, முழுமையாக கரையும் வரை கிளறவும்.
  • இந்த கலவை யுடன் மைதா, ஓட்ஸ் கலவையும் சேர்த்து பிசையவும்.

  • கொஞ்சம் கொஞ்சமாக பால் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.

  • சிறு சிறு உருண்டைகளாக்கி விரும்பிய வடிவம் செய்து பேகிங் தட்டில் வைக்கவும்
  • ஓவன் யை 180'c முன் சூடு செய்து 15 நிமிடம் பேக் செய்யவும்.

  • முடிந்ததும் மறு பக்கம் 5 நிமிடம் அதே போல் பேக் செய்யவும்.
  • ருசியான ஓட்ஸ் பிஸ்கட் தயார்.

குறிப்பு
  • சூடாக இருக்கும் பொழுது வேகாதது போல் இருக்கும் ஆனால் ஆறியதும் சரியாக இருக்கும்.
  • மெல்லிய வடிவங்களாக செய்யவும் அப்போது தான் சீராக வேகும்.
  • உணவு கட்டுப்பாடு உள்ளவர்கள் மேற் கூறியதில் வனஸ்பதி & சக்கரை இவ்விரண்டிலும் 1 கப்யிற்கு பதிலாக 1/2 கப்  உபயோக படுத்தி கொண்டு பாலின் அளவை 1/2 கப் ஆக உயர்த்தி கொள்ளவும். அப்பொழுது பெரிதாக சுவை மாற்றம் ஏதும் இருக்காது.
  • ஓவன் இல்லாதவர்கள் குக்கரில்(விசில் போட கூடாது) மணல் போட்டு மேலே அலுமினியம் தட்டில் பிஸ்கட் யை வைத்து 15 நிமிடம் பேக் செய்யலாம்.

Thursday, October 13, 2011

சுரைக்காய் பிரட் கோப்தா கிரேவி




தேவையான பொருட்கள்

கிரேவி செய்ய
சுரைக்காய் - 1/4 கிலோ
தக்காளி -3 துருவியது
வெங்காயம் - 3 அரைத்தது
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா -1 ஸ்பூன்
மஞ்சள் பொடி- 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் -1/4 கப்
சீரகம் -1 ஸ்பூன்

கோப்தா செய்ய
பிரட் - 6 பீஸ்
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - 3 ஸ்பூன்
மைதா- 1/2 கப்
எண்ணெய் - பொரித்து எடுக்க

கோப்தா செய்முறை
                                               
                                   
  • பிரட்  துண்டுகளின் ஓரங்களை வெட்டி விடவும். பிறகு அதை தயிர் சேர்த்து 2 நிமிடம் ஊற வைக்கவும்.
  • அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய்,உப்பு சேர்த்து பிசையவும்.
  • இந்த கலவையில் சிறிது சிறிதாக மைதா சேர்த்து பூரி மாவு பதத்தில் பிசையவும்.
  • சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  • உருண்டைகளை பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.
கிரேவி செய்முறை
    
                                                         
                              
  • சுரைக்காயை துருவி, வேக வைக்கவும்.
  • வேக வைத்த சுரைக்காயை பேஸ்ட் போல் அரைத்து வைத்து கொள்ளவும்.
  • கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து, அரைத்த வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்   
  • மஞ்ச தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
  • இப்பொழுது துருவி (அல்லது அரைத்து) வைத்துள்ள தக்காளி சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
  • பிறகு சுரைக்காய் பேஸ்ட்,கொஞ்சம் தயிர் சேர்த்து வதக்கவும்.
  • இப்பொழுது சிறிது தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.
  • கடைசியாக பொரித்து வைத்துள்ள கோப்தா வை போட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.
  • இந்த கிரேவி சப்பாத்தி, பூரி, ரொட்டி, பரோட்டா உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவையாக இருக்கும்.
குறிப்பு

  • எண்ணெய் சரியாக சூடாகாமல் கோப்தா போட்டால் எண்ணெய் குடிக்கும்.
  • பரிமாறும் பொழுது கோப்தா வை கிரேவி யில் சேர்க்கவும்.

Thursday, October 6, 2011

காஜு கத்லி/ முந்திரி கேக்


தேவையான பொருட்கள்
·         முந்திரி - 100 கிராம் (அ) ஒரு கப்
·         சர்க்கரை - 100 கிராம் (அ) ஒரு கப்
·         தண்ணீர் - 1/2 கப்
·         நெய் - ஒரு மேசை கரண்டி
செய்முறை
·         முந்திரியை மிக்ஸியில் போட்டு சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும். நைசாக அரைக்க வேண்டாம்.
·         அடுப்பில் வாணலியை வைத்து சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
·         சர்க்கரை எவ்வளவு சேர்க்கின்றோமோ அதில் பாதி அளவு தண்ணீர் சேர்த்தால் பாகு பதம் சரியாக வரும்.
·         பதம் சரியாக வந்தவுடன் அரைத்த முந்திரியை சிறிது சிறிதாக கொட்டி கிளற வேண்டும். கை விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
·         தோசை மாவு பதத்திற்கு சிறிது கெட்டியாக இருக்கும் பொழுது எடுத்து, நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியதும் வில்லைகளாக நறுக்கவும்.
·         இந்த இனிப்பிற்கு நெய் தேவையில்லை. தட்டில் தடவுவதற்கு மட்டும் சிறிது நெய் இருந்தால் போதும்.