Friday, October 14, 2011

ஓட்ஸ் பிஸ்கட்


                                 Homemade Oat Biscuits
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 2 கப்
மைதா - 2  கப்
பேகிங் பவுடர் - 3/4 ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
வெண்ணை (அ) வனஸ்பதி - 1 கப்
சக்கரை - 1 கப்
வன்னிலா எசென்ஸ் - 1  ஸ்பூன்
பால் - 1/4 கப்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் மைதா, ஓட்ஸ்.பேகிங் பவுடர் முன்றையும் கலந்து தனியாக வைத்து கொள்ளவும்.
             
  • வனஸ்பதி யை 5 நிமிடம் நன்றாக பீட் செய்யவும்.
  • அதனுடன் வன்னிலா எசென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.

  • பிறகு அதனுடன் சக்கரை சேர்த்து, முழுமையாக கரையும் வரை கிளறவும்.
  • இந்த கலவை யுடன் மைதா, ஓட்ஸ் கலவையும் சேர்த்து பிசையவும்.

  • கொஞ்சம் கொஞ்சமாக பால் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.

  • சிறு சிறு உருண்டைகளாக்கி விரும்பிய வடிவம் செய்து பேகிங் தட்டில் வைக்கவும்
  • ஓவன் யை 180'c முன் சூடு செய்து 15 நிமிடம் பேக் செய்யவும்.

  • முடிந்ததும் மறு பக்கம் 5 நிமிடம் அதே போல் பேக் செய்யவும்.
  • ருசியான ஓட்ஸ் பிஸ்கட் தயார்.

குறிப்பு
  • சூடாக இருக்கும் பொழுது வேகாதது போல் இருக்கும் ஆனால் ஆறியதும் சரியாக இருக்கும்.
  • மெல்லிய வடிவங்களாக செய்யவும் அப்போது தான் சீராக வேகும்.
  • உணவு கட்டுப்பாடு உள்ளவர்கள் மேற் கூறியதில் வனஸ்பதி & சக்கரை இவ்விரண்டிலும் 1 கப்யிற்கு பதிலாக 1/2 கப்  உபயோக படுத்தி கொண்டு பாலின் அளவை 1/2 கப் ஆக உயர்த்தி கொள்ளவும். அப்பொழுது பெரிதாக சுவை மாற்றம் ஏதும் இருக்காது.
  • ஓவன் இல்லாதவர்கள் குக்கரில்(விசில் போட கூடாது) மணல் போட்டு மேலே அலுமினியம் தட்டில் பிஸ்கட் யை வைத்து 15 நிமிடம் பேக் செய்யலாம்.

1 comment:

  1. எப்படா அடுத்த பதிவு போடுவாங்கன்னு காத்திருந்தது வீண்போகவில்லை... ஓட்ஸ் பிஸ்கட்...நான் வெகுநாளா எதிர்பார்த்த ஒரு பதிவு....அருமையான பதிவு...எளிமையான செய்முறை...அதுவும் சாதரணமாக வீட்ல இருக்கிற பொருட்களைக்
    கொண்டு...அதிலும் கடைசியாக கொடுத்துள்ள குறிப்பு..ஓவன் இல்லைன்னாலும் செய்ய கத்துக்கொடுக்கும் புத்திசாலித்தனம்....அருமை...
    சூப்பரோசூப்பர்...முக்கியமா புகைப்படங்கள்...வாவ் என்ன ஒரு மெனக்கெடல்....மேலும் தொடருங்கள்..சிரமமான காரியமெனினும் உங்க உழைப்புக்கு என் வாழ்த்துக்கள்.......

    ReplyDelete