Thursday, March 29, 2012

இடியாப்பம் ப்ரை




தேவையான பொருட்கள் 

இடியாப்பம் - 4 கப்
பட்டை- 1
லவகம் - 2
ஏலக்காய் - 1
இஞ்சி பூண்டு துருவல் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1 பெரியது
கேரட், பீன்ஸ், உருளை கிழங்கு - 1 கப் (பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் - 3
எலும்பிச்சை சாறு- 2 ஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய்- 3 ஸ்பூன்

செய்முறை 

  • வெங்காயம் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.பச்சை மிளகாய் யை இரண்டாக வெட்டி கொள்ளவும்.

  • வாணலில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவகம், ஏலக்காய் தாளித்து இஞ்சி பூண்டு துருவலை சேர்க்கவும்.
  • அது லேசாக சிவந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 3 நிமிடம்  வதக்கவும்.

  • பிறகு பச்சை மிளகாய், காய்கறி கலவை, உப்பு சேர்த்து வதக்கவும்.
  • கொஞ்சமாக தண்ணீர் தெளித்து 5 நிமிடம் மூடி வேக விடவும்.

  • காய்கறி வெந்த உடன் இடியாப்பமும் சேர்த்து நன்கு கிளறவும்.

  • கடைசியாக எலும்பிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.
  • தேவை பட்டாள் கொத்தமல்லி சேர்த்து கொள்ளவும். 




Sunday, March 25, 2012

ரவா பொங்கல்





தேவையான பொருட்கள்

ரவா - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
மஞ்ச தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப 

தாளிக்க

நெய் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி - ஒரு சிறு துண்டு
முந்திரிப்பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது


செய்முறை

  • இஞ்சி யை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வெறும் வாணலில் பயந்தம் பருப்பை சிவக்க வறுத்து எடுக்கவும்.
  • அதே வாணலில் ரவை யையும் 3நிமிடம் வறுத்து எடுக்கவும்.(சிவக்க வருக்க வேண்டாம்)

  • பயத்தம் பருப்புக்கு 2 கப் தண்ணீர், பச்சை மிளகாய், மஞ்ச தூள்  சேர்த்து குக்கரில்  2 விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

  • வாணலில் வேகவைத்த பருப்பு அதனுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  • தண்ணீர் கொதிக்கும் பொழுது ரவையும், உப்பு  அதனுடன் சேர்த்து கிளறி 10 நிமிடம் வேக விட்டு இறக்கவும்.

  • வேற ஒரு வாணலில் நெய் சேர்த்து சீரகம், மிளகு, முந்திரி, இஞ்சி துண்டு, கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து வேக வைத்த ரவை பயத்தம் பருப்புடன் கிளறவும்.
  • சூடான  ரவா பொங்கல் தயார். சட்னி அல்லது சாம்பார் உடன் பரிமாற மிக சுவையாக இருக்கும்.





Wednesday, March 21, 2012

சௌ சௌ,சுரைக்காய் மசாலா கூட்டு




தேவையான பொருட்கள் 

சின்ன வெங்காயம் - 1 கப்
தக்காளி - 1
பாசிப் பருப்பு - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கிராம்பு, பட்டை, லவகம் - தலா 1
சௌ சௌ & சுரைக்காய் - 1 கப் (சதுரங்களாக வெட்டியது )
பூண்டு பற்கள் - 5
பச்சை மிளகாய் -2
மிளகாய் தூள் - 1  டீஸ்பூன்
தனியா தூள் - 2  டீ ஸ்பூன்
மஞ்ச தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப

தாளிக்க

கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்த பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 2
கருவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - 1 சிட்டிகை
எண்ணெய் - 3 ஸ்பூன்

செய்முறை 

  • சின்ன வெங்காயத்தை முழுசாக உரித்து வைத்து கொள்ளவும். தக்காளியை 6 துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஒரு குக்கரில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி  பட்டை,கிராம்பு,லவகம் தாளிக்கவும்.
  • அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம் சேர்க்கவும்.
  • வெங்காயம் பொன் நிறம் ஆனதும், பொடியாக நறுக்கிய தக்காளி, பூண்டு பற்கள், பச்சை மிளகாய்  சேர்த்து வதக்கவும்.
  • பின் மஞ்ச தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்க்கவும்.ஊற வைத்துள்ள பாசிப் பருப்பு, நறுக்கிய காய்கறி சேர்த்து ஒரு கிளறு கிளறவும். 
  • 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2  விசில் வரை வேக விடவும்.
  • தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து  சேர்க்கவும்.
  • இந்த கூட்டு சாதம், சப்பாத்தி, தோசை, பூரி உடன் பரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.
குறிப்பு 

  • சுரைக்காய் யை உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது, சிறுநீர் நன்கு வெளியேறும்.
  • நீ‌ரி‌‌ழிவு நோயா‌ளிக‌ள் சௌ சௌ, சுரைக்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது.









Monday, March 19, 2012

இஞ்சி குழம்பு


தேவையான பொருட்கள் 

இஞ்சி - 100gm
புளி-  சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - ருசிக்கேற்ப
கடுகு - 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 5 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 4
கருவேப்பிலை - தேவைகேற்ப
மஞ்ச தூள் - 1 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
எண்ணெய் - தாளிக்க

செய்முறை 
1) முதலில் இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். பின் துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.


 2) ஒரு வாணலில் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி வெட்டிய இஞ்சியை பொன் நிறம் ஆகும் வரை வதக்கவும்.

3) பின் ஆறவைத்து பேஸ்ட் ஆக அரைத்து தனியே வைத்து கொள்ளவும்.


4) வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, துவரம் பருப்பு, கருவேப்பிலை, சிகப்பு மிளகாய் தாளிக்கவும்.


5) துவரம் பருப்பு நன்கு சிவந்ததும் மஞ்ச தூள்,அரைத்த இஞ்சி விழுது,புளி கரைச்சல் உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.


7) குழம்பு பதம் வந்த உடன் இறக்கி விடவும். கடுகு, சீரகம், சிகப்பு மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து குழம்புடன் சேர்க்கவும்.

குறிப்பு:
  • இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.
  • ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு கோப்பை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும்.
  • இயற்கையின் ஓர் கொடை தான் இந்த இஞ்சி, மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு. 
  • கொதிக்கும் தண்ணீரில் இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து பாருங்கள். சோடா வகைகளில் இஞ்சி சோடாவும் உண்டு.