Friday, April 20, 2012

ஜில் ஜில் கூல் கூல் குல்பி

விடுமுறை நாட்கள் தொடங்கி விட்டது, அதிகபடியான வெயிலும் தொடங்கி விட்டது... இந்நேரத்தில் அனைவரும் விரும்புவது ஜில்லுனு ஒரு ஐஸ் கிரீம்... சிறுவர்கள் வீட்டுலே இருப்பதால் தினமும் ஐஸ் கிரீம் வாங்கி தர சொல்லுவார்கள்.. எனவே இன்று நாம் வீட்டுலேயே எப்படி சுலபமா ஐஸ் கிரீம் செய்வதுனு பார்போம்.. (ஆமாம் இருக்குற கரண்ட் பிரச்சனைல எங்கேந்து ஐஸ் கிரீம் செய்வதுனு ! உங்க மனசு சொல்லுறது கேக்குதுங்க... அதுக்கும் ஒரு டிப்ஸ் கடைசியா சொல்லுறேன்.. )


தேவையான பொருட்கள் 
பால் - 1 லிட்டர்
மில்க் மேட் - 3 ஸ்பூன்
சக்கரை - 5 ஸ்பூன்
மைதா / சோள மாவு - 2 ஸ்பூன்
குங்கும பூ - 1 சிட்டிகை
பிஸ்தா, பாதாம் பருப்பு - தலா 5

செய்முறை

  • பாலை நன்றாக காச்ச வேண்டும். பால் நல்லா திக்கான வுடன் நிதானமான தீயில் வைத்து  கொள்ளவும்.

  • குங்குமபூ, சக்கரை, மில்க் மேட் சேர்த்து கிளறவும்.
  • சக்கரை கரைந்தவுடன் பாதாம், பிஸ்தா பருப்பை ஒன்னும் பாதியாகவும் உடைத்து அதனுடன் சேர்க்கவும்.


  • கடைசியாக மைதா மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறவும். 

  • 5 நிமிடம் கொதிக்க வேண்டும். கஞ்சி போல் வந்து விடும்.
  • இப்பொழுது அடுப்பை அனைத்து விடவும். சூடு அடங்கியதும் குல்பி மோல்டில் ஊற்றி ப்ரிட்ஜில் பிரீசரில் வைக்கவும்.
  • குறைந்தது 6 மணி நேரம் கழித்து பரிமாறவும். ஜில் ஜில்  கூல் கூல் குல்பி தயார்.
குறிப்பு
  • தேவையான பொருட்களில் மில்க் மேட் வீட்டில் இல்லை என்றால் கவலை வேண்டாம், அதற்கு பதில் சக்கரையின் அளவை அதிகமாகி கொள்ளவும். பெரிய மாற்றம் தெரியாது.
  • இனிப்பின் அளவு அதிகமாக இருக்க வேண்டும் அப்போது  தான் ஐஸ் கிரீம் செட்  ஆனவுடன் சுவைத்தால் செரியாக  இருக்கும். 
  • வீட்டில் கேசர் பாதாம் காம்ப்ளான் (kesar badam flavour complan) இருந்தால் அதையும் ஒரு ஸ்பூன் சேர்த்து கொள்ளுங்கள்  சுவை கூடும்.
  • இதே முறையில் குங்கும பூக்கு பதிலாக  சிறிது வெண்ணிலா எசென்சு சேர்த்தால் வெண்ணிலா ஐஸ் கிரீம் தயார்.
  • விரைவாக ஐஸ் கிரீம் செட்டாக வேண்டும் என்றால் அலுமினிய பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். 3 மணி நேரத்தில் செட் ஆகி விடும். 

  • குல்பி மொல்ட்கள் இப்பொழுது அலுமிநியதிலும் கிடைகிறது.


10 comments:

  1. ரொம்பவே சிம்பிளான ரெசிபியாத் தெரியுது. குல்பிக்காரன் ரோட்ல வர்றவரை வெயிட் பண்ணி. வாங்கிச் சாப்பிடறதை விட நாமே செஞ்சு சாப்பிடறது தனி குஷி, இல்ல... குல்பி மோல்ட் வாங்கி ட்ரை பண்ணிப் பாக்கறேன். Many Thanks to you Savitha sis!

    ReplyDelete
    Replies
    1. நிரஞ்சனா நான் தான் உனக்கு நன்றி சொல்லனும், முதல் வாசகியே நீ தான்.. கண்டிப்பா ட்ரை பண்ணு.. மோல்ட் இல்லனா சும்மா டம்பளர் ல ட்ரை பண்ணு..

      Delete
  2. பார்க்கவே நல்லா இருக்கே.
    குழந்தைகள் வீட்டில் இருந்தபோது செய்தது. மீண்டும் பழைய நின்வுகள் வருகின்றன. நல்ல பகிர்வும்மா.

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்தமைக்கு முதலில் என் வணக்கம்.. உங்கள் பாராட்டுகளுக்கு என் இதயம் கனிந்த நன்றி..

      Delete
  3. அருமையான செய்முறை.
    நாக்கில் நீர் ஊற வைத்து விட்டது.
    பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஐயா..

      Delete
  4. அருமையான செய்முறை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மனமார்ந்த பாராட்டுகளுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

      Delete
  5. அருமை.செய்து பார்க்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி. ப்ளாக் பாலோ செய்வதுக்கு ஏன் மனமார்ந்த நன்றி.

      Delete