தேவையான பொருட்கள்
தக்காளி - 5
கொத்தமல்லி - 1 கப்
பச்சைமிளகாய் - 2
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
தனியா பொடி - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - 1 சிட்டிகை
மஞ்ச தூள் - 1 சிட்டிகை
அரைத்துக் கொள்ளவும்
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
பொட்டுகடலை - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
செய்முறை
- தக்காளி, கொத்தமல்லி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- வாணலில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், மஞ்ச தூள் சேர்த்து தாளிக்கவும்.
- பருப்பு சிவந்ததும் தக்காளியை அதனுடன் சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் உப்பு சேர்த்து வதக்கவும் இதனால் தக்காளி உடனடியாக வதங்கும்.
- நன்கு வதங்கிய பிறகு அதனுடன் மிளகாய் பொடி, தனியா பொடி சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- மிளகாய் தூள் வாசம் போனவுடன் அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, அரைத்த விழுது சேர்த்து 10நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
- சுவையான சுலபமான குருமா தயார்.
- சப்பாத்தி, பூரி யுடன் இந்த குருமா அருமையாக இருக்கும்.
No comments:
Post a Comment