Friday, April 13, 2012

பிசா



பிசா என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பும் உணவாக மாறிவிட்டது. கடைகளில் வாங்கி சாப்பிடும் பிசா நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்  என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகையால் நம் வீட்டுலேயே இருக்கும் பொருட்களை வைத்து சுவையான, எளிமையான பிசாவை செய்து சாப்பிடுவோமே.....!

தேவையான பொருட்கள்

மைதா - 2 கப்
கோதுமை மாவு - 1 கப்
சக்கரை -  1/2 ஸ்பூன்
உப்பு - 1/௨ ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
ட்ரை யீஸ்ட் (dry yeast) - 1 ஸ்பூன்
பால் - 1 கப்
பூண்டு-மிளகாய் சாஸ் / தக்காளி சாஸ் - 3 ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
கொடைமிளகாய் - 1
பட்டன் மஷ்ரூம் - 3
துருவிய சீஸ் - 1 கப்

செய்முறை

  • ஒரு கிண்ணத்தில் வெது வெதுப்பான சூட்டில் பாலை எடுத்து கொள்ளவும்.

  • அதில் ஒரு ஸ்பூன் யீஸ்ட், சக்கரை, உப்பு, 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.
  • 10 நிமிடம் கழித்து ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவு, பால் கலவை சேர்த்து பிசையவும். இருக்கமாக பிசையாமல் சற்று தலசாக பிசையவும். தேவைபட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளவும்.

  • பிசைந்த மாவை மூடி வைக்கவும். 2 மணி நேரம் கழித்து பார்த்தல் 3 மடங்காக மாவு மாறி இருக்கும்.
  • கீழே உள்ள படத்தை பார்த்தால் புரியும். கைகளால் மாவை குற்றினால் காற்று வெளியேறி மீண்டும் சிறிதாகி விடும். காற்று அனைத்தும் வெளியேறும் படி நன்கு பிசையவும்.

  • பெரிய உருண்டைகளாக மாவை பிரித்து சப்பாத்தி திரட்டுவது போல் திரட்டவும்.
  • மாவு தலசாக இருப்பதால் மேல் மாவு அதிகமாக சேர்த்து திரட்ட வேண்டும்.இதை பிசா பேஸ் என்பார்கள்.

  • இந்த திரட்டின மாவை ஓவன் தட்டில் வைத்து 450'F சூட்டில் 5 நிமிடம் பேக் செய்யவும்.
  • அதற்குள் வெங்காயம், தக்காளி, கொடைமிளகாய், மஷ்ரூம் அனைத்தையும் நடுத்தரமான அளவில் வெட்டி கொள்ளவும்.
  • படத்தில் காட்டி இருப்பது போல் ஓவனில் மாவு எழும்பி இருக்கும். 

  • இப்பொழுது அதை எடுத்து சாஸ் தடவி காய்கறிகளை விருப்பம் போல் அலங்கரித்து , சீஸை மேலே துவவும்

  • மீண்டும் ஓவனில் 10 நிமிடம் 450 'F சூட்டில் வைக்கவும்.

  • சூடான சுவையான பிசா தயார்.

குறிப்பு 

  • பிசா மாவை காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
  • உங்கள் விருப்பம் போல் காய்கறிகளை பயன்படுத்தலாம்.






4 comments:

  1. Hey! Pizzaன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். மம்மிதான் அதெல்லாம் Junk Food, சாப்பிடாதடின்னு திட்டுவாங்க. நீங்க சொல்லியிருக்கற படி செஞ்சு பாத்தா நல்லாருக்கும்னுதான் தோணுது. ட்ரை பண்றேன். Thankyou Verymuch Sister!

    ReplyDelete
    Replies
    1. நிரஞ்சனா எல்லார் வீட்டுலயும் இதே கதை தான்... ஆனால் வீட்டுல செஞ்ச ஆரோகியமா இருக்கும்.. செஞ்சு பாருங்க சந்தேகம்னா கண்டிப்பா கேளுக...

      Delete
  2. ஸவிதா... நீங்க சொல்லியிருந்த மாதிரி ‘பீட்ரூட் அல்வா’ செஞ்சு பாத்தோம். நல்லாவே இருந்தது. நன்றி. ‘பிஸா’ செய்யறது பத்தி நீ்ங்க சொல்லியிருக்கிறது ரொம்ப உபயோகமான விஷயம். அரிய சமையல் குறிப்பும் கூட. கூடிய சீக்கிரம் ட்ரை பண்ணிப் பாத்துடறேன். நல்ல குறிப்புக்கு நன்றியும், தொடர்ந்து பல பயனுள்ள குறிப்புகள் தர வாழ்த்துக்களும்..!

    ReplyDelete
    Replies
    1. அல்வா செய்து பார்த்ததுக்கு முதலில் நன்றி... பிசா வும் செஞ்சு பாருங்க சார் கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்...

      Delete