Wednesday, February 27, 2013

மிளகு ரசம்




தேவையான பொருட்கள்

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
தக்காளி - 1
பூண்டு - 2 பல்
கொத்தமல்லி தலை - சிறிதளவு
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - ருசிக்கேற்ப

தாளிக்க

கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
சீரகம் - 1 ஸ்பூன்

செய்முறை

  • வெறும் வாணலில் துவரம் பருப்பு, மிளகு இரண்டையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  • புளியை நீர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.
  • புளி கரைசலில் பெருங்காயம், வறுத்து பொடித்த பொடி, உப்பு , நறுக்கிய தக்காளி, தட்டிய பூண்டு பற்கள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  • கொதித்தவுடன் அடுப்பை அனைத்து விட்டு கொத்தமல்லி தலை தூவி இறக்கவும்.
  • தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து ரசத்துடன் சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு

சளி, ஜுரம் தொல்லை இருக்கும் பொழுது இந்த ரசத்தை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

No comments:

Post a Comment