தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 1 கப்
தக்காளி - 1
பாசிப் பருப்பு - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கிராம்பு, பட்டை, லவகம் - தலா 1
சௌ சௌ & சுரைக்காய் - 1 கப் (சதுரங்களாக வெட்டியது )
பூண்டு பற்கள் - 5
பச்சை மிளகாய் -2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீ ஸ்பூன்
மஞ்ச தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
தாளிக்க
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்த பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 2
கருவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - 1 சிட்டிகை
எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை
- சின்ன வெங்காயத்தை முழுசாக உரித்து வைத்து கொள்ளவும். தக்காளியை 6 துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஒரு குக்கரில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு,லவகம் தாளிக்கவும்.
- அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம் சேர்க்கவும்.
- வெங்காயம் பொன் நிறம் ஆனதும், பொடியாக நறுக்கிய தக்காளி, பூண்டு பற்கள், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் மஞ்ச தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்க்கவும்.ஊற வைத்துள்ள பாசிப் பருப்பு, நறுக்கிய காய்கறி சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
- 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் வரை வேக விடவும்.
- தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.
- இந்த கூட்டு சாதம், சப்பாத்தி, தோசை, பூரி உடன் பரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.
குறிப்பு
- சுரைக்காய் யை உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது, சிறுநீர் நன்கு வெளியேறும்.
- நீரிழிவு நோயாளிகள் சௌ சௌ, சுரைக்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
Hey good job savitha...its interesting ..i will try this recipe ..keep posting
ReplyDeleteNIthila
thanks nithila..
ReplyDelete