Sunday, March 25, 2012

ரவா பொங்கல்





தேவையான பொருட்கள்

ரவா - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
மஞ்ச தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப 

தாளிக்க

நெய் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி - ஒரு சிறு துண்டு
முந்திரிப்பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது


செய்முறை

  • இஞ்சி யை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வெறும் வாணலில் பயந்தம் பருப்பை சிவக்க வறுத்து எடுக்கவும்.
  • அதே வாணலில் ரவை யையும் 3நிமிடம் வறுத்து எடுக்கவும்.(சிவக்க வருக்க வேண்டாம்)

  • பயத்தம் பருப்புக்கு 2 கப் தண்ணீர், பச்சை மிளகாய், மஞ்ச தூள்  சேர்த்து குக்கரில்  2 விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

  • வாணலில் வேகவைத்த பருப்பு அதனுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  • தண்ணீர் கொதிக்கும் பொழுது ரவையும், உப்பு  அதனுடன் சேர்த்து கிளறி 10 நிமிடம் வேக விட்டு இறக்கவும்.

  • வேற ஒரு வாணலில் நெய் சேர்த்து சீரகம், மிளகு, முந்திரி, இஞ்சி துண்டு, கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து வேக வைத்த ரவை பயத்தம் பருப்புடன் கிளறவும்.
  • சூடான  ரவா பொங்கல் தயார். சட்னி அல்லது சாம்பார் உடன் பரிமாற மிக சுவையாக இருக்கும்.





2 comments:

  1. அருமை புதுமை ருசித்தபின் மீண்டும் கருத்தை சொல்லுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கோவை.மு.சரளா.

      Delete