Monday, April 2, 2012

பீட்ரூட் அல்வா




தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 2
பால் - 1 கப்
சக்கரை - 1/2 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
முந்திரி - 5
நெய் - 5 ஸ்பூன்

செய்முறை

  • முதலில் பீட்ரூட் யை  தோல் சீவி துருவி கொள்ளவும்.

  • வாணலில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி துருவிய பீட்ரூட் யை  பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  • வதக்கும் பொழுதே ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளவும். சீக்கரம் வதங்கும், சுவையும் அதிகரிக்கும். (எப்பொழுதும் ஸ்வீட் செய்யும் பொழுது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொண்டால் சுவை கூடும்.)
  • பீட்ரூட் வதங்கியதும் ஒரு கப் பாலையும் அதனுடன் சேர்த்து வேக விடவும். சுமார் 10 நிமிடம் ஆகும்.

  • பால் சுண்டி பீட்ரூட் நன்கு வெந்து இருக்கும் பொழுது, சக்கரை சேர்த்து கிளறவும்.
  • இப்பொழுது சக்கரை கரைந்து நீர் சேர்த்தது போல் இருக்கும்.

  • பிறகு வாணலில் ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை கிளறவும்.
  • நன்கு சுருண்டு அல்வா பதம் வந்ததும் ஏலக்காய் பொடி, மீதம் உள்ள நெய்,  வறுத்த முந்திரி சேர்த்து கிளறவும். 

  • சுவையான சத்தான பீட்ரூட் அல்வா தயார். இதற்கு அதிகம் நெய் அல்லது எண்ணெய் குட தேவை படாது.

2 comments:

  1. பீட்ரூட் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அல்வாவே அதில பண்ணலாம்கறது எனக்குப் புதுசு. சமையலில் நான் பெரிய 0. வீட்ல செய்யச் சொல்லிப் பாக்கறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. செஞ்சு பாத்துட்டு ருசியாக இருந்தால் கண்டிப்பா சொல்லுக சார்..

      Delete