Sunday, April 8, 2012

பாகற்காய் பகோடா



தேவையான பொருட்கள்

பாகற்காய் - 1/4 கிலோ
உப்பு - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
மஞ்ச தூள் - 1/2 ஸ்பூன்
கடலை மாவு  - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை

  • முதலில் பாகற்காய் யை கழுவி மெல்லிதாக வெட்டி கொள்ளவும்.   

  • ஒரு பாத்திரத்தில் கொடுக்க பட்டுள்ள மாவு, தூள் வகைகள், உப்பு அனைத்தையும் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

  • பின்பு நறுக்கி வைத்துள்ள பாகற்காயும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  • எண்ணெய் காய வைத்து பாகற்காயை பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.
  • எளிமையான சுவையான பாகற்காய் பகோடா தயார்.

8 comments:

  1. எளிமையான சுவையான பாகற்காய் பகோடா பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மனமார்ந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ராஜேஸ்வரி..

      Delete
  2. பாகற்காயில பக்கோடாவா... எங்கம்மா என்னை அடிக்கடி பாகற்காய் சாப்பிடச் சொல்வாங்க. இப்படி செஞ்சு சாப்பிட்டா நல்லா இருக்கும்னு தோணுது. அவசியம் ட்ரை பண்றேன். என் புதிய வாசகி,தோழி என்ன எழுதறாங்கன்னு பாக்க வந்தேன். நல்ல ஒரு தளத்தைக் கண்டுகொண்ட மகிழ்ச்சியோட நன்றி சொல்லிக்கறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்தமைக்கு முதலில் வணக்கம்... கண்டிப்பாகக செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்...

      Delete
  3. பாகற்காய் பக்கோடா மிக அருமை.படிப்படியான படங்கள் சூப்பர்.

    ReplyDelete
  4. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி..உங்கள் ஆதரவு என்றும் எனக்கு தேவை..

    ReplyDelete
  5. உங்களு்க்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    புத்தாண்டுக்கு புது ரெஸிபி எதுவும் போடலையா..? வாசம் பிடிச்சுட்டே வந்து ஏமாந்து போனேன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.. உங்கள் குடும்பத்தினருக்கும் என் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
      தமிழ் புத்தாண்டுக்கு பன்னாட்டு சமையல் பிசா.. நாம் அனைத்து நாட்டையும் வரவேற்கும் நாடாச்சே அதான்...

      Delete