Thursday, October 6, 2011

காஜு கத்லி/ முந்திரி கேக்


தேவையான பொருட்கள்
·         முந்திரி - 100 கிராம் (அ) ஒரு கப்
·         சர்க்கரை - 100 கிராம் (அ) ஒரு கப்
·         தண்ணீர் - 1/2 கப்
·         நெய் - ஒரு மேசை கரண்டி
செய்முறை
·         முந்திரியை மிக்ஸியில் போட்டு சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும். நைசாக அரைக்க வேண்டாம்.
·         அடுப்பில் வாணலியை வைத்து சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
·         சர்க்கரை எவ்வளவு சேர்க்கின்றோமோ அதில் பாதி அளவு தண்ணீர் சேர்த்தால் பாகு பதம் சரியாக வரும்.
·         பதம் சரியாக வந்தவுடன் அரைத்த முந்திரியை சிறிது சிறிதாக கொட்டி கிளற வேண்டும். கை விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
·         தோசை மாவு பதத்திற்கு சிறிது கெட்டியாக இருக்கும் பொழுது எடுத்து, நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியதும் வில்லைகளாக நறுக்கவும்.
·         இந்த இனிப்பிற்கு நெய் தேவையில்லை. தட்டில் தடவுவதற்கு மட்டும் சிறிது நெய் இருந்தால் போதும்.

3 comments:

  1. படத்தில் பார்த்ததுமே உடனே சுவைக்க ஆசையாக உள்ளது.

    அழகான செய்முறை குறிப்புகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஐயா..

      Delete