தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 2cup
பட்டை, லவகம், கிராம்பு - தலா 2
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
வெங்காயம் நீளமாக அரிந்தது - 1 கப்
தக்காளி பொடியாக அரிந்தது - 1 கப்
காய்கறி கலவை - 1 கப்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்ச தூள் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
தயிர் - 1 கப்
கொத்தமல்லி புதினா - 1 கப்
வெண்ணை (அ) எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
உப்பு - ருசிக்கேற்ப
செய்முறை
- முதலில் பாஸ்மதி அரிசி யை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- குக்கரில் வெண்ணை சேர்த்து உருகியதும், பட்டை கிராம்பு லவகம் தாளிக்கவும்.
- இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்கவும்.
- பிறகு வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.
- இதனுடன் தக்காளி, காய்கறி கலவை, உப்பு, மஞ்ச தூள், மிளகாய் தூள்,பச்சை மிளகாய் இவை அனைத்தும் சேர்த்து 5 நிமிடம் வரை கிளறவும்.
- கொத்தமல்லி, புதினா, தயிர் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்.
- முடிவாக ஊற வைத்த அரிசியின் தண்ணீர் யை இருத்து விட்டு வதக்கிய கலவை யுடன் சேர்த்து 3 நிமிடம் கிளறவும்.
- 1 கப் அரிசி க்கு ஒன்றை கப் அளவு தண்ணீர் என்ற விதத்தில் 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விசில் போடவும்.
- 3 விசில் வந்ததும் அடுப்பை அனைத்து விடவும்.
- வெஜிடபிள் புலாவ் தயார். தயிர் பச்சடி யுடன் பரிமாற மிக அருமையாக இருக்கும்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete