தேவையான பொருட்கள்
கிரேவி செய்ய
சுரைக்காய் - 1/4 கிலோ
தக்காளி -3 துருவியது
வெங்காயம் - 3 அரைத்தது
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா -1 ஸ்பூன்
மஞ்சள் பொடி- 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் -1/4 கப்
சீரகம் -1 ஸ்பூன்
கோப்தா செய்ய
பிரட் - 6 பீஸ்
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - 3 ஸ்பூன்
மைதா- 1/2 கப்
எண்ணெய் - பொரித்து எடுக்க
கோப்தா செய்முறை
- பிரட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி விடவும். பிறகு அதை தயிர் சேர்த்து 2 நிமிடம் ஊற வைக்கவும்.
- அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய்,உப்பு சேர்த்து பிசையவும்.
- இந்த கலவையில் சிறிது சிறிதாக மைதா சேர்த்து பூரி மாவு பதத்தில் பிசையவும்.
- சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- உருண்டைகளை பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.
கிரேவி செய்முறை
- சுரைக்காயை துருவி, வேக வைக்கவும்.
- வேக வைத்த சுரைக்காயை பேஸ்ட் போல் அரைத்து வைத்து கொள்ளவும்.
- கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து, அரைத்த வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்
- மஞ்ச தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
- இப்பொழுது துருவி (அல்லது அரைத்து) வைத்துள்ள தக்காளி சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
- பிறகு சுரைக்காய் பேஸ்ட்,கொஞ்சம் தயிர் சேர்த்து வதக்கவும்.
- இப்பொழுது சிறிது தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.
- கடைசியாக பொரித்து வைத்துள்ள கோப்தா வை போட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- இந்த கிரேவி சப்பாத்தி, பூரி, ரொட்டி, பரோட்டா உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவையாக இருக்கும்.
குறிப்பு
- எண்ணெய் சரியாக சூடாகாமல் கோப்தா போட்டால் எண்ணெய் குடிக்கும்.
- பரிமாறும் பொழுது கோப்தா வை கிரேவி யில் சேர்க்கவும்.
ஹாய் சவிதா
ReplyDeleteவாழ்த்துக்கள்...புதுமையான ஒரு சமையல்...உடனே செய்து பாத்துடுவோம்...நாளைக்கே...மேலும் தொடருங்கள்....
கமெண்ட் போஸ்ட் பண்ணும் போது word verification கேக்குதே அதை ரிமுவ் பண்ணுங்க சவி
ReplyDeleteஅப்புறம் நான் உங்க வலைப்பூவின் முதல் ஃபாலோவர்..ஆனா நீங்க ஏன் உங்க வலைப்பூவுல ஃபாலோவரா இன்னும் ஆகல....
ReplyDeleteமுதல் ஃபாலோவர் செந்தில் க்கு என் வணக்கம்.உங்கள் பரிந்துரைக்கு மிக்க நன்றி. இது போல் உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.
ReplyDelete